Congress Leaders protests protests : சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்ததை கண்டித்து காங்கிரஸார் போராட்டம்: பெங்களூரில் 2 கார்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு

பெங்களூரு: Congress Leaders protests in bangalore : நேஷனல் ஹெரால்டு (National Herald) வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத்தொடர்ந்து சோனியா காந்தி இன்று தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரானார்.

இதனைக் கண்டித்து பெங்களூரு, புதுச்சேரி (Bangalore, Puducherry), ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தின் அருகே நடைபெற்ற தர்னா போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடக மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரணி காங்கிரஸார் (Youth Congress ), சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரே ஒரு காரை கொண்டு வந்து நிறுத்தி அதற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. போலீஸார் இது தொடர்பாக 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, சேஷாத்ரிபுரம் நேரு சதுக்கம் அருகே (Seshatripuram Near Nehru Square) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு யாரோ தீ வைத்தனர். தகவல் அறிந்த போலீஸார் அங்கு வருவதற்குள் காருக்கு தீ வைத்த நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இரு இடங்களிலும் கார்களுக்கு தீ வைத்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பொதுமக்கள் நடமாடும் இடங்களில் கார்களுக்கு தீ வைத்த (Set fire cars) சம்பவங்களைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மூத்த போலீஸ் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீ வைத்த கார்கள் வெடித்திருந்தால், நிலைமை என்னவாகி இருக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமைதியான போராட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இருக்கும். இது போன்று பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புதான் வரும் என்பதை உணர வேண்டும்.