பெங்களூரு: Renaming of trains, operation of special trains to reduce additional congestion : ரயிலுக்கு மறு பெயர் மற்றும் கூடுதல் நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்க தென் மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி 12613/14 மற்றும் 16221/22 கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி 08.10.2022 முதல் பின்வரும் விரைவு ரயில்களின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது: 1. ரயில் எண். 12613/12614 மைசூரு – கே.எஸ்.ஆர் பெங்களூரு – மைசூரு திப்பு எக்ஸ்பிரஸ், உடையார் எக்ஸ்பிரஸ் என மறுபெயரிடப்படும் (Mysuru – KSR Bengaluru – Mysuru Tippu Express will be renamed as Wodiyar Express). அதே போல ரயில் எண். 16221/16222 தல்குப்பா – மைசூரு – தல்குப்பா எக்ஸ்பிரஸ், குவெம்பு எக்ஸ்பிரஸ் என மறுபெயரிடப்படும்.
கூடுதல் நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள்:
1 ரயில் எண். 06565/06566 யஸ்வந்த்பூர் – திருநெல்வேலி – யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (Yeswantpur – Tirunelveli – Yeswantpur Express) சிறப்பு (2-பயணங்கள்): ரயில் எண். 06565 யஸ்வந்த்பூர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 18.10.2022 மற்றும் 25.10.2022 அன்று பிற்பகல் 12:45 மணிக்கு யஸ்வந்த்பூரில் புறப்படும். மறுநாள் காலை மறுநாள் 04:30 திருநெல்வேலிக்கு வந்தடையும். திரும்பும் திசையில், ரயில் எண். 06566 திருநெல்வேலி – யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் 19.10.2022 மற்றும் 26.10.2022 அன்று காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து சிறப்புப் புறப்படும் ரயில் அதே நாள் இரவு 11:30 மணிக்கு யஸ்வந்த்பூர் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் பானஸ்வாடி, கார்மேலாரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி நிலையங்களில் ஆகிய இடங்களில் இரு திசைகளிலும் நிறுத்தப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் 2- ஏசி இரண்டு அடுக்குகள், 4 – ஏசி மூன்று அடுக்குகள், 11 – இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் 2 – ஜெனரேட்டர் கார்களுடன் கூடிய லக்கேஜ் கம் பிரேக்-வேன்கள் (மொத்தம் 19 பெட்டிகள்) இருக்கும்.
- ரயில் எண். 06253/06254 மைசூரு – தூத்துக்குடி – மைசூரு எக்ஸ்பிரஸ் (Mysore – Thoothukudi – Mysore Express) சிறப்பு (1-பயணம்): ரயில் எண். 06253 மைசூரு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மைசூரிலிருந்து 21.10.2022 அன்று பிற்பகல் 12:05 புறப்படும். மறுநாள் காலை 05:00 மணிக்கு தூத்துக்குடி சென்றைடையும். இந்த ரயில் எலியூர், மண்டியா, கேஎஸ்ஆர் பெங்களூரு, பெங்களூரு, கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி நிலையங்களில் நின்று செல்லும்.
திரும்பும் திசையில், ரயில் எண். 06254 தூத்துக்குடி – மைசூரு எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் தூத்துக்குடியில் இருந்து 22.10.2022 அன்று பிற்பகல் 03:00 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள்.காலை 08:30 மணிக்கு மைசூரை வந்தடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு கண்டோன்மென்ட், கே.எஸ்.ஆர் பெங்களூரு, கெங்கேரி, மண்டியா மற்றும் எலியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். - இந்த சிறப்பு ரயில்கள் 1- ஏசி இரண்டு அடுக்குகள், 3 – ஏசி மூன்று அடுக்குகள்,
10 – இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர், 2 – இரண்டாம் வகுப்பு லக்கேஜ் மற்றும் பிரேக்-
வேன்கள்/திவ்யாங்ஜன் நட்பு பெட்டி (மொத்தம் 16 பெட்டிகள்) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.