PM to launch Rozgar Mela – recruitment drive: வரும் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் 75,000 பேருக்கு வேலை

புதுடெல்லி: PM to launch Rozgar Mela – recruitment drive for 10 lakh personnel – on 22 October. 10 லட்சம் பேரை பணிக்கு அமர்த்தும் இயக்கத்திற்கான வேலைவாய்ப்பு முகாமை அக்டோபர் 22ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

10 லட்சம் பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் இயக்கத்திற்கான வேலைவாய்ப்பு முகாமை அக்டோபர் 22ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த முகாமில் புதிதாக நியமிக்கப்படவிருக்கும் 75,000 புதிய பணியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். நியமனதாரர்களிடையே, பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் குடிமக்கள் நலனை உறுதி செய்தலை நோக்கிய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் இது முக்கியமான நடவடிக்கையாகும். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பிரதமரின் வழிகாட்டுதல்படி அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் இயக்கம் போல் செயல்படுகின்றன.

நாடு முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்டு புதிதாக பணி அமர்த்தப்படுவோர் மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் /துறைகளில் பணியில் சேர்வார்கள். பிரிவு-ஏ, பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெற்றவர்கள்), பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெறாதவர்கள்), பிரிவு-சி என பல்வேறு நிலைகளில், இவர்கள் அரசுப் பணியில் சேர்வார்கள். மத்திய ஆயுதப்படை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பலவகை பணி செய்வோர் (எம்டிஎஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களாக இவை இருக்கும்.

அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தாங்களாகவோ அல்லது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் நியமன வாரியம் போன்ற பணிநியமன முகமைகள் மூலம், இயக்கம் போல் இந்த பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. இதனை விரைவுப்படுத்த தெரிவு நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு தொழில்நுட்ப ரீதியாகவும், நடத்தப்படுகிறது.