Remdesivir: காலாவதியாகும் நிலையில் 1000 கோடி மதிப்பிலான ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள்

remdesivir vaccine
காலாவதியாகும் நிலையில் 1000 கோடி மதிப்பிலான ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள்

Remdesivir: இந்தியாவில் 60 லட்சம் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த கோடை காலத்தில் கொரோனா 2-வது அலையின்போது நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக கருதப்பட்ட ரெம்டெசிவருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவரை வாங்கி சென்றனர். தேவை அதிகம் இருந்த காரணத்தால், ரெம்டெசிவர் மருந்தும் அதிக அளவு தயாரிக்கப்பட்டது.

ஆனால் உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், இந்தியாவில் தற்போது 60 லட்சம் ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கி விட்டன.

ரெம்டெசிவர் மட்டுமின்றி கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு மருந்துகளின் நிலையும் இது தான். ஒட்டுமொத்தமாக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் பயனற்று போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: LPG Cylinder price: இலங்கையில் மலைக்க வைக்கும் சிலிண்டர் விலை