Mallikarjun Kharge wins: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அபார வெற்றி

புதுடெல்லி: Mallikarjun Kharge wins the Congress presidential elections with 7897 votes, Shashi Tharoor got about 1000 votes; 416 votes rejected . அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அபார வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 24 ஆண்டுகால இடைவெளிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் திங்கட் கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் வேட்பாளர்களாக களம் கண்டனர். நாடு முழுவதும் உள்ள 65 வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மொத்தம் 9,915 பேரில் 9,497 பேர் தங்கள் வாக்கினை ரகசிய வாக்குச்சீட்டு முறைப்படி புதிய தலைவரை தேர்வு செய்ய அளித்தனர். இதன் வாக்கு எண்ணிக்கை புதுடெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிகை இன்று மதியம் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே அபார வெற்றி பெற்றார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக காங்கிரஸின் காந்தி அல்லாத முதல் தலைவராக அவர் வழி வகை செய்துள்ளார். மொத்தமுள்ள 9,385 வாக்குகளில் கார்கே 7,897 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின், ராகுல் காந்தி தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்திக்குப் பதிலாக மல்லிகார்ஜூன கார்கே பதவியை ஏற்கிறார்.

இதுகுறித்து போட்டி வேட்பாளரும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர், “கட்சியின் மறுமலர்ச்சி இன்று தொடங்குகிறது” என்று தான் நம்புவதாகவும், காங்கிரசின் தலைவராக இருப்பது ஒரு பெரிய மரியாதை மற்றும் மிகப்பெரிய பொறுப்பு, மேலும் இந்த பணியில் கார்கே அனைத்து வெற்றிகளையும் பெற விரும்புகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.