IITs have been the pride of the nation: ஐஐடி.,க்கள் தேசத்தின் பெருமை: குடியரசுத் தலைவர் முர்மு

புதுடெல்லி: IITs have been the pride of the nation said the President of India. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தேசத்தின் பெருமை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

புதுடெல்லியில் இன்று (செப்டம்பர் 3, 2022) ஐஐடி டெல்லியின் வைர விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடிக்கள் உலகிற்கு நிருபித்துள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட வகையில், ஐஐடி.,க்களின் கதை சுதந்திர இந்தியாவின் கதை.

இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐஐடி.,க்கள் பெரும் பங்காற்றியுள்ளன. ஐஐடி.,யின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். ஐஐடி டெல்லியிலும் மற்ற ஐஐடிக்களிலும் படித்தவர்களில் சிலர் இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளனர்.

மேலும், ஐஐடி.,க்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது. கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூகம், செயல்பாடு, இதழியல், இலக்கியம் மற்றும் அரசியல் என வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஐஐடியில் படித்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.

2047ஆம் ஆண்டு சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது, ​​நான்காவது தொழிற்புரட்சியின் காரணமாக, நம்மைச் சுற்றியுள்ள உலகம் பெருமளவில் மாறிவிடும். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் சமகால உலகத்தை கற்பனை செய்ய முடியாத நிலையில் இருந்ததைப் போலவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் வாழ்க்கையை எவ்வாறு மாற்றப் போகிறது என்பதை இன்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. எதிர்கால சக்திகளைக் கையாள்வதற்கான தொலைநோக்கு மற்றும் உத்திகளைக் கொண்டிருக்க வேண்டும். வேலையின் தன்மை முற்றிலும் மாறும்.

எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நமது கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இதற்கு புதிய கற்பித்தல்-கற்றல் அணி, கல்வியியல் மற்றும் எதிர்காலம் சார்ந்த உள்ளடக்கம் தேவைப்படும். எங்கள் புகழ்பெற்ற ஐஐடி.,க்கள் மூலம், சவாலை எதிர்கொள்ள தேவையான அறிவுத் தளம் மற்றும் சரியான திறன்களுடன் இளைய தலைமுறையினரை வளர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.