Former BJP MLA : ஏற்கனவே ஐந்து பேரை கொன்று விட்டோம் என்ற பாஜக முன்னாள் எம்எல்ஏ

சர்ச்சைக்குரிய இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரலானதால், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததற்காக ஐபிசி (IPC) பிரிவு 153 ஏ-ன் கீழ் கியான் தேவ் அஹுஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ராஜஸ்தானின் ராம்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான கியான் தேவ் அஹுஜா (Former MLA Gian Dev Ahuja), ஆதர்வலர்களுடனான சந்திப்பின் போது இந்த‌ சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தனது தொகுதியில் பசு பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்திய கியான் தேவ் அஹுஜா, பசுவை யார் கொன்றாலும், அவர்களை கொண்டு விட வேண்டும். ஏற்கனவே ஐந்து பேரை கொன்றுவிட்டோம் என்று பெருமையாக பேசினர். மேலும், இவ்வாறு கூறும்போது, ​​லால்வண்டி, பெர்ஹூரில் பசுவைக் கொலை செய்தவர்களை கொலை செய்தோம் என்று அவர் கூறினார். இதன் மூலம் இரண்டு பகுதிகளில், முறையே 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ரக்பர் கான் மற்றும் பெஹ்லு கான் கொல்லப்பட்டதற்கான மறைமுக துப்பு கிடைத்துள்ளது.

அந்த இரண்டு கொலைகளும் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ராம்கர் தொகுதியில் (Ramgarh concetancy) நடந்துள்ளது. இருவரும் கொல்லப்பட்டபோது, ​​ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் இருந்தது. ராம்கர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் கியான் தேவ் அஹுஜா. கியான் தேவ், ‘பசுவைக் கொல்பவர்களைக் கொல்லுமாறு எங்கள் ஆர்வலர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன், அவர்களுக்கும் ஒரு இலவச வாய்ப்பை அளித்துள்ளேன்’ என்றார்.

தற்போது சர்ச்சைக்குரிய இந்த வீடியோ வைரலாகி (The video went viral) வருகிறது. இந்த வீடியோ வைரலானதால், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததற்காக ஐபிசி (IPC )பிரிவு 153 ஏ-ன் கீழ் கியான் தேவ் அஹுஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மறுபுறம், பாஜக தலைவரின் அறிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அஹுஜாவின் இந்த கருத்திலிருந்து பாஜக விலகி நிற்கிறது. கியான் தேவ் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல. அஹுஜாவின் கருத்து நியாயமானது அல்ல. இதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்று ராஜஸ்தான் பாஜக பிரிவு தெளிவு படுத்தியுள்ளது.

வட இந்தியாவில் (North India) இது போன்று கொலைகள் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகிறது. அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, கொலை வழக்கை மூடி விடுகின்றனர். இதனால் உ ண்மை வெளி உலகத்திற்கு தெரியாமல் போகிறது. கியான் தேவ் அஹுஜா தனது பெருமையை கூறும் போது, 5 கொலைகளை செய்த உண்மையை போட்டுடைத்துள்ளார். இன்னும் இது போன்று மூடப்பட்ட கொலை வழக்குகள் எத்தனை உள்ளது என்பதனை யார் அறிவர்?.