Tiruchendur Subramania Swamy Temple : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை

மதுரை : Ban on cell phone usage inside Tiruchendur Subramania Swamy Temple : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் அர்ச்சகர் சீதாராமன் (Tiruchendur Subramanya Temple Archakar Seetharaman) சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது : பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுப்பதை தடை செய்யப்பட வேண்டும். சில சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது. எனவே, திருச்செந்தூர் கோயிலின் உள்ளே செல்போன் பயன் பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் அர்ச்சகர் சீதாராமன் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் அமர்வு (Bench of Justices Mahadevan, Sathyanarayanaprasad) முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது நீதிபதிகள், கோவிலின் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவருடைய தனிப் பட்ட யூடியூப் சேனலில் பதிவிடுகிறார். இது ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா? என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனைபறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்கக்கூடாது.

கோவிலின் வாசலிலேயே சோதனை மையம் அமைத்து செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை (Test with cell phone detector) செய்த பின்னரே அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்தசுற்றறிக்கையை அறநிலையத் துறை ஆணையர் அனுப்ப வேண்டும். இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதி பதிகள் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர் .