Hema Malini: மதுரா நகரம் சுத்தமான இடமாக இல்லை- எம்.பி ஹேமமாலினி

உத்தர பிரதேசம் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரியா கிராமத்தில் நேற்று புதிய அரசுப் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில், பாஜக எம்.பி ஹேமமாலினி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில கல்வித்துறை அமைச்சர் ஜிது வகானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, நிகழ்ச்சியில் மதுரா தொகுதி எம்.பி ஹேமமாலினி கூறியிருப்பதாவது:-

உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா நகரம் மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தானில் உள்ள கிருஷ்ணருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் செளரை கோஸ் யாத்திரை சமீபத்தில் நடந்து முடிந்தது. பலரது எண்ணங்களிலும் மதுரா சுத்தமான இடமாக இல்லை என்பது தான். காரணம் கோடிக்கணக்கான மக்கள் மதுராவிற்கு வருகை தருவதும், அங்கு தூய்மையைப் பேணுவதற்கான வழிமுறையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இருப்பினும், நாங்கள் நிறைய முயற்சி செய்து அதை நன்றாகப் பராமரித்துள்ளோம்.

நான் மதுரா தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல விஷயங்களை மாற்ற முயற்சித்து வருகிறேன். எங்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறைய உதவுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Lack of sanitation mechanism in Mathura makes city unclean: Hema Malini

இதையும் படிங்க: Vikram movie: புகழ்ப்பெற்ற திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர்