Union Minister of State Shoba Karandalaje : இந்திய விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவை: மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே

உணவு வீணாகாமல், குறைந்த உணவு உற்பத்தி உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.

பெங்களூரு : Indian farmers need machinery and technology to increase productivity: இந்திய விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவை என்று மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை 7 வது சர்வதேச வேளாண் கண்காட்சியை (International Agricultural Exhibition) தொடக்கி வைத்து அவர் பேசியது: கடந்த ஆண்டு இந்தியா 314 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள் மற்றும் 334 மிமீ டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ததுள்ளது. நாட்டிற்கு இப்போது தேவை மலிவு மற்றும் தரமான உணவு பதப்படுத்துதல், வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி வழிகளை கண்டறிய வேண்டும். வேளாண் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ள உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களை அழைத்த அவர், உணவு பதப்படுத்துதலுக்கான மலிவு விலையில் இயந்திரங்களை (Affordable machines) தயாரிக்க‌ வேண்டும். மதிப்பு கூட்டல் அல்லது சந்தை அணுகல் ஆகியவற்றில் சவால்களுக்காக விவசாயம் மற்றும் தோட்டக்கலை உற்பத்திகள் வீணாகின்றன. உணவு வீணாகாமல், குறைந்த உணவு உற்பத்தி உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து சிந்திக்க வேண்டும். மத்திய கிழக்கு ஒரு நல்ல சந்தையாக இருக்க முடியும். ஏனெனில் அவர்கள் முக்கியமாக எண்ணெய் உற்பத்தியாளர்கள். உணவு தானியங்கள், காய்கறிகள் அங்கு உற்பத்தி செய்ய முடியாது. 2023 ஆம் ஆண்டு ‘தினைகளின் சர்வதேச ஆண்டு’ என்று அழைக்கப்படுவதால், இந்தியா மிகப்பெரிய தினை உற்பத்தி செய்யும் பிராந்தியங்களில் ஒன்றாக இருப்பதால், அது குறிப்பிடத்தக்க ஏற்றுமதியாளராக இருப்பதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது.

பூச்சிக்கொல்லிகளின் தேவையற்ற பயன்பாடு, பண்ணை, விளைபொருட்களையும் மண்ணையும் பாதிப்பது மட்டுமல்லாமல், மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்பதால், இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் செல்ல வேண்டும் (Farmers should go for organic farming). இந்தியா உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், விவசாய சமூகம் இயற்கை விவசாயம் பற்றி சிந்திக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் அரசாங்கம் மானியங்கள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகிறது. அறிவியல் மற்றும் உற்பத்தித் துறையின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு மலிவு விலையில் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் முருகேஷ் ஆர் நிராணி, தோட்டக்கலை, திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் முனிரத்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.