தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் தேதி தமிழகம் வந்த தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கட்சி நிகழ்வுகளிலும் தினேஷ் குண்டுராவ் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கட்சியினரிடையே வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.