ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் ஊபா சட்டத்தின் கீழ் கைது

டெல்லி சிஏஏ கலவரத்தில் தொடர்பு இருப்பதாக ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு (குடியுரிமை திருத்த சட்டம்) எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி மாதம் நடந்த போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.

இந்த கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.டெல்லி போலீசார் காலித்த சிறப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் காலித்தை கைது செய்து உள்ளனர்.போலீசார் காலித்திடம் சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர்.அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here