தஞ்சை அருகே இருவழிசாலை- ஐகோர்ட் மதுரைக்கிளை

தஞ்சை, கல்லணை கால்வாய் கரை சாலையை அகலப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெட்டிகாடு முதல் ஈச்சங்கோட்டை வரை அகலப்படுத்தி, இருவழிசாலையாக மாற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த துரை என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு உத்தரவிட்டது.