ஒரு குட் நியூஸ்..தலைநகர் டெல்லியில் 100-க்கு கீழே குறைந்த கொரோனா தொற்று !

national news : வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு !

கொரோனா தொற்றின் பரவலை தடுக்க அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 48,698 கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

டெல்லியில், இன்று ஒரே நாளில் மட்டும் 85 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தான் இந்த வருடத்தின் குறைந்த கொரோனா தொற்று நாள் பாதிப்பு எண்ணிக்கை.கிட்டத்தட்ட ஒரு மாத காலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.

டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின் படி, தற்போது 1,598 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.