TNPSC : டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளுக்கான திட்ட அறிக்கை வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளுக்கான திட்ட அறிக்கை வெளியீடு

TNPSC : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி.என்.பி .எஸ் .சி போட்டி தேர்வுகளுக்கான திட்ட அறிக்கையை டி.என் .பி .எஸ் .சி தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

டி .என்.பி.எஸ் .சி தலைவர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குரூப் -2 , 2ஏ நிலைகளில் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளது ,குரூப் -4 நிலையில் பழைய காலி பணியிடம் 5255 மற்றும் புதிய காலி பணியிடம் 3000 உள்ளது.

குரூப் 2-தேர்வு தேதி பிப்ரவரி மாதத்திலும் . குரூப் -4 தேர்வு தேதி மார்ச் மாதத்திலும் தேதி அறிவிக்கப்படும் . அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்கு பின்னர் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு 32 க்கும் அதிகமான தேர்வுகள் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நிகழாதவாறு ஓ.எம்.ஆர். தாள்கள், மை, விடைத்தாள் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது. விடைத்தாளில் விடை எழுத அளவோடு இடம் விடப்படும். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யாரும் தற்போதும் பணியில் இல்லை.தேர்வருக்கு சம்பந்தம் இன்றி தேர்வு மையம் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்தாளில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம்; கூடுதல் மதிப்பெண்கள் பெற்றால் அதுவும் கணக்கிடப்படும்.

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஏற்றிவரும் லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதையும் படிங்க: ATM WITHDRAWAL: ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு..!

ப இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை

Release of Project Report for TNPSC Competitive Examinations