கர்நாடகாவில் திறக்கப்படும் பள்ளிகள் !

ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இதனை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.மேலும் கொரோனா பரவல் இருப்பதால் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.இந்நிலையில்,கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகஸ்ட் 23 முதல் உயர்நிலைப் பள்ளிகள் – 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இரவு 9 மணி முதல் தினமும் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருந்தது.தற்போது கர்நாடகாவில் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு என தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு கட்டங்களாக பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் பேட்ச் முதல் மூன்று நாட்களும் அடுத்த பேட்ச் அடுத்த மூன்று நாட்களும் வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.