கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் மூலம் ரூ.2.51 கோடி மோசடி

நகைக்கடன் தள்ளுபடியில் மீண்டும் ஒரு வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2.51 கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

77 நபர்களுக்கு போலி நகைக்கடன்கள் வழங்கியதாக ஆரணி வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், போலி நகைகள் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

நகைக்கடன்கள் குறித்து ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு