மீண்டும் நடைபெறும் விபரீதம்.. மாணவர் விஷம் குடித்து தற்கொலை !

நீட் நுழைவு தேர்வு மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படுவது.இதனை ஆதரித்தும் மற்றும் எதிர்த்தும் மக்கள் போராடி வருகிறார்கள்.

தற்போது 3 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத நிலையில் மாணவர் கீர்த்திவாசன் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவையை சேர்ந்த மாணவர் கீர்த்திவாசன். 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற வில்லை.

இந்த நிலையில்,2021 ஆகஸ்ட் மாதம் நடந்த நீட் தேர்வை எழுதியுள்ளார்.தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்ற மனவருத்ததில் இருந்த மாணவன் கீர்த்திவாசன், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.