தனுஷால் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். இப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

கர்ணன் படத்தில் ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா சந்திரமவுலி, நடராஜன் சுப்பிரமணியன், யோகி பாபு, அழகம் பெருமாள், லால் மற்றும் கவுரி ஜி கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் நிறைவடைந்தது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், இன்னும் சில தினங்களில் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் கர்ணன் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளாராம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.