Karnataka hijab row : ஹிஜாப்பை எதிர்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பெண் !

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Karnataka hijab row : கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் ‘ஹிஜாப்’க்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை விடுமுறை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரம் பெரிதாக்கிக்கொண்டு இருக்கிறது. அங்கு வரிசையாக பல்வேறு கல்லூரிகளில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் இந்து மாணவர்கள் சிலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து மாணவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவிகள் எதிராக இந்த எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.Karnataka hijab row

குந்தபுராவில் உள்ள பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆனால் அந்த மாணவி அங்கிருந்து ஓடாமல் அவர்களை பார்த்து அஞ்சாமல் தனி ஆளாக நின்று எனக்கு பயம் இல்லை என்பது போல சத்தமாக கூறியுள்ளார். மாணவர்கள் இப்படி மோதி கொள்ளும் சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் கர்நாடக மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று பொம்மை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ‘Bheem Boy’ died : மைக்கேல் மதனா காம ராஜனில் பீம் பாய் காலமானார் !