மாணவர்கள் கவனத்திற்கு..இலவசமாக பயணிக்கலாம் !

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன

மேலும் நவம்பர் ஒன்று முதல் நேரடி வகுப்புகள் மற்ற வகுப்புகளுக்கு தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில்,மாணவர்களுக்கான ஒரு அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் 1ம் தேதி முதல், 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனத் அரசு அறிவித்துள்ளது.

பள்ளி சீருடை அணிந்திருந்த பழைய பஸ் பாஸ் அட்டையை காண்பிக்க வேண்டும்.பழைய அட்டை இல்லை என்றால் பள்ளியின் அடையாளஅட்டையை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பாதிப்பு !