Omicron: சென்னையில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு

மான்களில் ஒமைக்ரான்

Omicron: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கடந்த ஒரு வாரத்தில் 7 ஆக சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா பாதிப்பு தகவல்களின் படி, சென்னையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (டிச. 28) மொத்தம் 19 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவல் சதவிகிதம் 1% என்ற அளவில் இருந்தது.

ஆனால், இந்த வாரம் சென்னையில் கொரோனா பரவல் சதவிகிதம் 7% ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று (புதன்கிழமை) 20 ஆயிரத்து 415 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சதவிகிதம் 7.3 ஆக உள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 6.3 சதவிகிதம் அதிகமாகும்.

வைரஸ் பரவல் அதிகரிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ஒமைக்ரான் பரவல் காரணமாகவே தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் மாதிரிகள் பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்று பரவி இருப்பதாகவே முடிவுகள் வருகின்றன’ என்றார்.

இதையும் படிங்க: TN Assembly: சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு