TN news : முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் !

முக கவசம் அணிவது கட்டாயம்

TN news : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.TN news

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 31 வரை தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொற்று அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களுக்கு அபராதத் தொகையினை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !