Tiruvannamalai Festival Complete: ஜோதி பிழம்பாய் காட்சி அளித்த அண்ணாமலையார் மகாதீபம் நிறைவு

திருவண்ணாமலை நகரத்தில் ஜோதி பிழம்பாய் (Tiruvannamalai Festival Complete) காட்சி கொடுத்த அண்ணாமலையாரின் மகா தீபம் நிறைவு பெற்றது. இதனையடுத்து மகா தீபக் கொப்பரையை மலையிலிருந்து கோயில் ஊழியர்கள் இறக்கி வந்துள்ளனர்.

அண்ணாமலையார் அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி டிசம்பர் 6ம் தேதி அன்று மாலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அன்றிலிருந்து சுமார் 11 நாட்களுக்கும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வந்தனர்.

தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் 6ம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இதற்காக சுமார் 300 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த தீப கொப்பரையில் ஏற்றப்பட்ட தீபம் ஜோதிப்பிழம்பாக சுமார் 11 நாட்களாக காட்சிக் கொடுத்தது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாய் காட்சி அளித்த அண்ணாமலையாரின் மகா தீபம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபக் கொப்பரையை மலையிலிருந்து இறக்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தீபகொப்பரை அண்ணாமலையார் கோயில் உள்ளே பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:சீனாவில் கரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பு: பெய்ஜிங்கில் லாக்டவுன்

முந்தைய செய்தியை பார்க்க:Ramadoss On Tnpsc Annual Planner: டி.என்.பி.எஸ்.சி. மூலமாக ஆண்டுக்கு 1754 நியமனங்கள் போதுமானவையல்ல: டாக்டர் ராமதாஸ் கேள்வி