Tirupathi Temple UPI QR barcode system: திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் வழங்குவதில் முறைகேடு: யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் முறை அறிமுகம்

இதன்மூலம் பக்தர்கள் அறைகள் பெற விரைவில் பணம் செலுத்தப்படுவதோடு அறைகள் காலி செய்த பின்னர் பக்தர்களின் முன் வைப்பு தொகை விரைந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஆந்திரா: UPI QR barcode scanning system in Tirupathi Temple : திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் வழங்குவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் முறை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் வைப்புத் தொகை, அறையை காலி செய்யும்போது கோயில் நிர்வாகம் (Temple Administration) அடுத்த 24 மணி நேரத்தில் அந்தந்த வங்கிகளுக்கு திருப்பி செலுத்தி விடுகிறது.

ஆனால் பக்தர்களின் வங்கி கணக்கில் அந்த பணம் செல்வதற்கு 10 முதல் 15 நாள்கள் வரை ஆகிறது. இதை தவிர்க்க புதிய திட்டத்தை கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் தங்கும் அறைகளை ஒதுக்கும்போது யுபிஐ க்யூஆர் (UPI QR barcode) கோடுவை ஸ்கேன் செய்து பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதன்மூலம் பக்தர்கள் அறைகள் பெற விரைவில் பணம் செலுத்தப்படுவதோடு அறைகள் காலி செய்த பின்னர் பக்தர்களின் முன் வைப்பு தொகை விரைந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை (The reception to this project) பொறுத்து அறைகள், லட்டு, தரிசன டிக்கெட் உள்ளிட்டவைகளை பெறுவதற்கான‌ அனைத்து பண பரிமாற்றத்திற்கும் யுபிஐ க்யூஆர் கோடு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக அமல்படுத்தினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.