தமிழகத்தில் ஆபரேஷேன் கள்ளச்சாராயம் 2.0 நடத்தப்படுமா? -தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

EPS: தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா 2.0 வேட்டையை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் இரவு பகலாக கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்தனர். இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், ஆபரேஷேன் கள்ளச் சாராயம் 2.0 நடத்தப்படுமா? .தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார் .

மேலும் கள்ளச் சாராயம், போதைப் பொருட்களில் இருந்து மக்களை காக்க காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என பழனிசாமி தெரிவித்த்துள்ளார்.

இதையும் படிங்க: ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத்- மகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை