Two persons arrested for cutting cake with machetes: பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய இருவர் கைது

விழுப்புரம்: Two persons arrested for cutting cake with machetes. விழுப்புரம் அருகே பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தின் சென்னை பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் பட்டாக்கத்தியுடன் தனது பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதனையடுத்து தமிழக காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அவர்களை கைது செய்திருந்தது.

இதனைத்தொடர்ந்து சில காலமாக இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், வானூரில் பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகனான லாரி டிரைவர் வெங்கடேசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரியம்மன் கோவில் அருகே வாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், மூவரும் பட்டாக்கத்தியுடன் அப்பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வெங்கடேசன், அவரது நண்பர் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.