நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு..!

இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

Textile traders in Erode: கொரோனா ஊடரங்கு காலத்தில் முடங்கிப்போன பின்னலாடைத் தொழில் தற்போது நூல் விலை உயர்வு மேலும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடை அடைப்பு போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபடும் நிலையில், இதன்மூலம் ஏறக்குறைய ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், கரூரிலும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. நூல் விலையை குறைக்க கோரி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூரிலும் சுமார் ரூ. 100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Egg price: முட்டை விலை கிடு கிடு உயர்வு