School and college holidays for 10 districts : அதிக கனமழை காரணமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை

சென்னை: School and college holidays for 10 districts including Chennai due to heavy rain : அதிகனமழை காரணமாக சென்னை உட்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை (Thiruvallur, Kanchipuram, Chengalpattu, Ranipet) ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிக‌ கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டது. சென்னை, திருவாரூர், நாகை, வேலூர், தஞ்சை, மயிலாடுதுறி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, நாகை, வேலூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை (Tiruvarur, Ranipet, Nagai, Vellore, Thanjavur and Mayiladuthurai) ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர், மாட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (Heavy to very heavy rain at a couple of places in Puducherry and Karaikal). தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூ , கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.