LPG cylinder price hike: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

LPG cylinder price hike: சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

LPG cylinder price hike: Cooking gas gets expensive by Rs 50, check new rates

இதையும் படிங்க: ஜொமோட்டோவுக்கு ஆறு மாதங்களில் ரூ.87,000 கோடி இழப்பு