Gold rate: இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை

Gold rate: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் விற்பனை அதிக அளவில் இருந்து வருகிறது. தங்கம் விலையானது இந்த வாரத்தில் விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் மறுநாள் சற்று குறைந்து விற்பனையானது. பின்னர் அதிரடியாகக் குறைந்து இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. கடந்த 18ஆம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4,739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்கப்பட்டது. 19ஆம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து 20ஆம் தேதியும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. இவ்வாறு தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் அதிரடியாகக் குறைந்து ஒரு சவரன் ரூ.38,120-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.

அந்த வகையில் இன்று சற்று அதிகரித்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4,775 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 38,200 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: PMK Meeting: சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்