UDAN Scheme completes 5 years of success: விமானப் போக்குவரத்தின் ‘உடான்’ திட்டம் வெற்றிகரமாக 5 ஆண்டுகள் நிறைவு

புதுடெல்லி: UDAN Scheme of Ministry of Civil Aviation completes 5 years of success: விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தின் முதல் விமான சேவையை கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்தார். சாதாரண மக்களும் விமானப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் இத்திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, 2வது மற்றும் 3வது தர நகரங்கள் விமானப் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு 74 விமான நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், உடான் திட்டத்தின் மூலம் தற்போது அது 141 ஆக அதிகரித்துள்ளது.

உடான் திட்டத்தின் கீ்ழ் 68 செயல்படாத விமான நிலையங்கள் இணைக்கப்பட்டன. 425 புதிய வழித்தடங்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டன. 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வரை இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்.

2026ம் ஆண்டுக்குள் 1000 வழித்தடங்களுடன் 220 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபோர்ட்டுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

UDAN-ன் கீழ் செயல்படும் பிராந்திய இணைப்புத் திட்டம் (RCS) வழித்தடங்கள் மற்றும் விமான நிலையங்களின் மாநில வாரியான விவரங்கள்

வரிசை எண்மாநிலம்RCS வழிகள்RCS விமான நிலையங்கள்
1அந்தமான் & நிக்கோபார் தீவு (UT)NILNILNIL
2ஆந்திரப் பிரதேசம்2602கடப்பா, கர்னூல்
3அருணாச்சல பிரதேசம்0402தேசு, பாஸிகாட்
4அசாம்3004ஜோர்ஹட், லிலாபரி, தேஜ்பூர், ரூப்சி
5பீகார்1101தர்பங்கா
6சண்டிகர்06NILNIL
7சத்தீஸ்கர்1202பிலாஸ்பூர், ஜக்தல்பூர்
8டாமன் & டையூ (UT)0201டையூ
9டெல்லி (UT)35NILNIL
10கோவா06NILNIL
11குஜராத்5308பாவ்நகர், ஜாம்நகர், காண்ட்லா, கேஷோத், முந்த்ரா, போர்பந்தர், ஒற்றுமை சிலை (WA), சபர்மதி ரிவர் ஃப்ரண்ட் (WA)
12ஹரியானா0601ஹிசார்
13ஹிமாச்சல பிரதேசம்2004சிம்லா, குலு, மண்டி (எச்), ராம்பூர் (எச்)
14ஜம்மு & காஷ்மீர்04NILNIL
15ஜார்கண்ட்0101தியோகர்
16கர்நாடகா9006பெல்காம், ஹூப்ளி, மைசூர், வித்யாநகர், கலபுர்கி, பிதார்
17கேரளா1801கண்ணூர்
18லடாக் (UT)NILNILNIL
19லட்சத்தீவு (UT)NILNILNIL
20மத்திய பிரதேசம்2901குவாலியர்
21மகாராஷ்டிரா6506கோண்டியா, ஜல்கான், கோலாப்பூர், நாந்தேட், நாசிக், சிந்துதுர்க்
22மணிப்பூர்06NILNIL
23மேகாலயா1401ஷில்லாங்
24மிசோரம்02NILNIL
25நாகாலாந்து0801திமாபூர்
26ஒடிசா1801ஜார்சுகுடா
27புதுச்சேரி (UT)0201புதுச்சேரி
28பஞ்சாப்2004அடம்பூர், லூதியானா, பதிண்டா, பதன்கோட்
29ராஜஸ்தான்3803பிகானர், ஜெய்சல்மர், கிஷன்கர்
30சிக்கிம்0601பாக்யோங்
31தமிழ்நாடு1401சேலம்
32தெலுங்கானா40NILNIL
33திரிபுரா06NILNIL
34உத்தரப்பிரதேசம்6306ஆக்ரா, கான்பூர், ஹிண்டன், பரேலி, குஷிநகர், பிரயாக்ராஜ்
35உத்தரகாண்ட்2408பந்த்நகர், பித்தோராகர், சஹஸ்த்ரதாரா (எச்), சின்யாலிசூர் (எச்), நியூ தெஹ்ரி (எச்), கவுச்சர் (எச்), ஸ்ரீநகர் (எச்), ஹல்த்வானி (எச்)
36மேற்கு வங்காளம்2401துர்காபூர்