Draupadi Murmu : குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாட்டிற்கு வருகை

தமிழ்நாடு: presidential candidate Draupadi Murmu : குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று மாலை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து திரௌபதிமுர்மு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அவர் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் தமிழ்நாடு மாநிலத்திற்கு வருகை புரிந்து அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இதற்காக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை புதுச்சேரி செல்லும் திரௌபதி முர்மு, அங்குள்ள கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அங்கிருந்து தனிவிமானத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.