PM urges youngsters StartUps Challenge: கைத்தறி ஸ்டார்ட்அப் சவாலில் பங்கேற்க இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு

ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளமே

புதுடெல்லி: PM urges youngsters associated with StartUps to take part in Handloom Startup Grand Challenge: கைத்தறி ஸ்டார்ட்அப் மகா சவாலில் பங்கேற்க ஸ்டார்ட்அப்களுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் கலை மரபுகளை கொண்டாட உழைக்கும் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். கைத்தறி ஸ்டார்ட்அப் மகா சவாலில் பங்கேற்குமாறு ஸ்டார்ட்அப் உடன் தொடர்புடைய அனைத்து இளைஞர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேசிய கைத்தறி தினத்தில், இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நமது கலை மரபுகளைக் கொண்டாட உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் #MyHandloomMyPride”

“நெசவாளர்களுக்கு யோசனைகளை தெரிவிக்கவும், புதுமைகளை உருவாக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பு. ஸ்டார்ட்அப் உலகத்துடன் தொடர்புடைய அனைத்து இளைஞர்களையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், “இந்தியாவின் கைத்தறித்துறை, நமது வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த பாரம்பரிய கலாச்சாரத்தைப் பறைசாற்றுகிறது. கடந்த 1905-ஆம் ஆண்டு சுதேசி இயக்கம் இந்நாளில் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, இத்தகைய பண்டைய இந்திய கலைக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக ஆகஸ்ட் 7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.”
“உள்நாட்டு நெசவாளர்கள் நெய்த கைத்தறிப் பொருட்களை நாட்டு மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தான் இந்நாளின் நோக்கமாகும். நம் கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, ஊக்குவிப்பது, கைத்தறி நெசவாளர்கள், குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிப்பது போன்ற மோடி அரசின் உறுதிப்பாடுகளுக்கு வலு சேர்க்க, 8-வது தேசிய கைத்தறி தினமான இன்று, நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.