Culmination of Exercise Udarashakti: இந்தியா- மலேசிய விமான படை பயிற்சி நிறைவு

மலேசியா: India-Malaysia Air Force exercise completed: மலேசியாவின் குவான்டன் விமானத் தளத்தில் நடைபெற்ற இந்திய விமானப்படை மற்றும் ராயல் மலேசியன் விமானப்படை இடையேயான இருதரப்பு விமானப் பயிற்சி உத்ரா சக்தி நிறைவு பெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரண்டு விமானப்படைகளும் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பினரிடமிருந்தும் அதிக அளவிலான போர் யுக்திகள் வெளிப்படுத்தப்பட்டன.

இரு விமானப்படைகளும் தங்களது சிறப்பான போர் நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ள உத்ரா சக்தி பயிற்சி உதவியாக இருந்தது. பயிற்சியின் நிறைவு விழாவில், 7 சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின.

தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

போர் சாதனங்கள் மற்றும் கருவிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் கருவிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுதில்லியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

எதிர்கால காலாட்படை சிப்பாய்க்கான சாதனம் (F-INSAS), உள்ளிட்ட புதிய தலைமுறை கண்ணிவெடியான நிபுன், மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனங்கள், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்தும் என திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.