Job Fair: நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: Private sector job fair tomorrow at Namakkal. நாமக்கல்லில் நாளை 28ம் தேி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 28.10.2022 அன்று நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக்,சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்றபணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு(Diploma), பட்டப்படிப்பு(Degree), ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர் பயிற்சி -COPA, Draftsman Civil, Information Communication, Electrician, Machinist, Mechanic Autobody Repair) மற்றும் கணினியியல் (Java, Tally) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் வேலைவாய்ப்பு உதவி தொகை திட்டத்திற்கான படிவம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, அலுவலகத்திற்கு வரும் அனைவரும் தவறாது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றவும்.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 28.10.2022 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.