ஆயுதப்படை காவலர் தற்கொலை விவகாரம் : கடலூர் கந்துவட்டி அனிதா கைது

ஆயுதப்படை காவலர் தற்கொலை விவகாரம்

Crime: கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 1ம் தேதி விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் கந்துவட்டி கொடுமையினால் காவலரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்குள்ள காவலர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதாவை போலீசார் கைது செய்தனர். காவலர் செல்வகுமாருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க: Guns in America: நியூயார்க்கில் 21 வயதுக்கு உட்பட்டோர் துப்பாக்கி வாங்க தடை