GST Council: நிர்மலா சீதாராமன் தலைமையில் 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

GST Council: தலைநகர் டெல்லியில் 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வரிச் சீர்திருத்தம் மீதான ஆய்வு அறிக்கைகளை மாநில நிதி மந்திரி குழு, நேரடியாக சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சில பொருள்கள் மீதான வரிவிகிதத்தை மாற்றியமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. எனவே, மத்திய அரசின் இந்த முடிவை சில மாநிலங்கள் எதிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியா!

பிரியா பவனி சங்கர் இந்திய தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் திரையுலகிற்குள் தமிழ் தொலைக்காட்சியில் “செய்தி வாசிப்பாளராக” அறிமுகமானவர். பின்னர் நாடக தொடரில் நடித்து பிரபலமான இவர், இடத்தொடர்பினை கொண்டு திரையுலகிலும் தடம் பதித்துள்ளார்.

இவர் திரையுலகில் “செய்தி வாசிப்பாளராக” புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற காதல் தொடரில் கதாநாயகியாக “பிரியா அர்ஜுன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இடத்தொடரின் மூலம் பல தமிழ் ரசிகர்களை பெற்ற இவர், விஜய் தொலைகாட்சில் ஒளிபரப்பப்பட்ட பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருதினராக கலந்து கொண்டுள்ளார்.

தொலைக்காட்சி அறிமுகம் கொண்டு திரையுலகில் பிரபலமான இவர், 2017-ம் ஆண்டு “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

இவர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை (மாயவரம்) என்ற நகரத்தில் 1989-ம் ஆண்டு பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்பவருக்கு மகளாகப் பிறந்தார்.

திரையுலக சார்ந்த படிப்பினை படிக்க ஆர்வம் கொண்ட இவர், ஒரு சில காரணங்களால் தனது இளங்கலை பட்டத்தினை எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர் என்னும் பிரிவில் கற்றுள்ளார். தனது படிப்பினை முடித்து சாப்ட்வேர் பொறியாளராக “இன்போசிஸ்” என்ற தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளார்.

இவர் தனது கல்லூரி இரண்டாம் ஆண்டு முதல் தொலைக்காட்சி சார்ந்த பணிகளுக்கு முயற்சி செய்து வந்துள்ளார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர், தன மேற்படிப்பாக மாஸ்டர் ஆப் பிஸ்னஸ் அட்மினிஸ்டரேஷன் (எம்.பி.ஏ) படிப்பினை கற்றறிந்தார்.

இதையும் படிங்க: Horoscope today: இன்றைய ராசி பலன்