Gold Rate: தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை உயர்வு

Gold Rate: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிவை கண்டு வருகின்றன.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.56 உயர்ந்து ரூ.4,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.448 அதிகரித்து ரூ.38,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 68.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Ramanathaswamy Temple: 11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்