இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43,893 பேருக்கு கரோனா தொற்று உறுதி

tn news : மீண்டும் ஊரடங்கு வருமா
மீண்டும் ஊரடங்கு வருமா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43,893 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 58,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,59,509 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு 6,10,803 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 10 கோடியே 54 லட்சத்து 87 ஆயிரத்து 680 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 10,66,786 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.