தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது

heavy-rain-warning-to-tamil-nadu-by-chennai-meteorological-center
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்று(அக்., 28) முதல் துவங்கியது. நடப்பாண்டில் சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும். தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு 44 செ.மீ., ஆகும். இந்தாண்டு சராசரி மழை அளவு இயல்பை யொட்டியோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.