பிகாரில் வாக்குப்பதிவு தொடக்கம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

பிகாரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில், இன்று முதல்கட்டமாக 71 சட்டடப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிகார் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் சஞ்சய் குமார் சிங் கூறுகையில், “முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 31 ஆயிரத்து 380 வாக்குசாவடிகளில் ஆறாயிரம் வாக்குசாவடிகள் பதற்றம் நிறைந்த பகுதிகள் ஆகும்.

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் அமைதியான நடத்த ஏதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஈவிஎம் இயந்திரங்கள், விவிபிஏடி-கள் ஏற்கனவே வந்துள்ளன.