வாக்காளர் பட்டியல் 4 நாட்கள் சிறப்பு முகாம் தமிழக தேர்தல் ஆணையர் தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சீர்திருத்தம் தொடர்பாக 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.இன்னும் ஐந்து மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, திருத்தங்கள் நடைபெற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.09 கோடி பேர் பெண்கள், 3.01 கோடி பேர் ஆண்கள், 6,385 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

இந்தப் பட்டியலில் உள்ள சுமார் 13.75 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர் 2.08 லட்சம் பேர் முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்தார்.