முதல் பெண் ‘விங் கமாண்டர்’ காலமானார்

நம் விமானப்படையின், முதல் பெண், ‘விங் கமாண்டர்’ என பெருமை பெற்ற, டாக்டர் விஜயலக்ஷ்மி ரமணன் காலமானார்.

நம் விமானப்படையின், முதல் பெண் மருத்துவ அதிகாரி மற்றும் ‘விங் கமாண்டர்’ என பெருமை பெற்ற டாக்டர் விஜயலக்ஷ்மி ரமணன், கடந்த, 18ம் தேதி பெங்களூரில் உள்ள அவரது மகள் வீட்டில் மரணம் அடைந்தார். இந்திய விமானப்படை மருத்துவ அதிகாரியாக, 1955ல் பொறுப்பேற்ற அவர், 1972ல் விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார்.

மகப்பேறு மருத்துவராக பணியாற்றி, சிறந்த சேவைக்கான ராணுவத்தின், ‘விஷிஸ்ட் சேவா’ விருது பெற்ற விஜயலக்ஷ்மி, 1979ல் ஓய்வு பெற்றார்.பின், பெங்க ளூரில் மகள் வீட்டில் தங்கியிருந்த அவர், தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்தார்.இவரது கணவர் கே.வி.ரமணனும், விமானப்படை அதிகாரியாக பொறுப்பு வகித்தவர்.