90 நிமிடங்களில் 6.1 மில்லியன் பேர் பார்வை- புதிய சாதனைப் படைத்த ‘மாஸ்டர்’ டீசர்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் டீசரை வெளியான சிறிது நேரத்தில் 6.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

எப்பொழுதும்போல இந்த டீசரிலும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்யின் காட்சியை #Vaathi, #MasterTeaser என்ற ஹாஷ்டேக்கினைக் கொண்டு சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.இந்த நிலையில், டீசர் வெளியாகி 90 நிமிடங்களில் இதுவரை 6.1 மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுள்ளனர். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.