மீண்டும் தொடங்கிய வேல் யாத்திரை – சென்னையில் பரபரப்பு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் இரண்டாவது நாளாக வேல் யாத்திரை தொடங்கி உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை இந்த வேல் யாத்திரை நடக்கிறது.இதைத்தொடர்ந்து வேல் யாத்திரையில் பங்கேற்க கூடாது என வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்று பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவினரை போலீசார் கைது செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்