அமெரிக்க அமைச்சர்கள் இன்று டில்லி வருகை

அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்கும் முக்கிய பேச்சு இன்று(அக்.,26) டில்லியில் நடக்கிறது.

அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவு பல முயற்சிகளில் வலுத்து வருகிறது. குறிப்பாக அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இடையில் இணக்கமான நட்புறவு நிலவுவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அமைச்சர்கள் மைக்பாம்பியோ, மார்க் எஸ்பர் இன்று (அக்.,26) டில்லி வருகின்றனர். இருவரும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெயசங்கர் ஆகியோரை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடக்கிறது.

இந்த பேச்சில் உலகளாவிய பிரச்னைகள், சீனாவின் எல்லை தொடர்பான விவகாரங்கள், மற்றும் அடிப்படை பரிமாற்ற நட்புறவு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது . அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.