முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய முதியவர்!!!

முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய முதியவரின் செயலுக்கு விளையாட்டாக பார்க்கப்பட்டாலும் பலரும் விளையாட்டு வினையாகக் கூடாது என எச்சரிக்கின்றனர்.
முதியவர் ஒருவர் முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கட்டுமானம், விவசாயம், இடிப்புப்பணி, பூமி தோண்டுதல் , அகழ்வுப் பணிக்காக ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்த படுகின்றது. அவ்விதம் பயன்படுத்த பட்ட ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு முதியவர் ஒருவர் வேலை முடிந்த பின்னர் தனது முதுகினை சொறிந்து கொள்ள பயன்படுத்தியுள்ளார்.

துண்டால் முதுகினை சொறிந்த பின்னரும் அது திருப்தி அளிக்காத காரணத்தால், ஜே.சி.பி ஆபரேட்டரை கொண்டு இயந்திரத்தை இயக்க வைத்து சொரிந்து கொள்கிறார். கிரேன் ஆபரேட்டரும், முதியவரும் விளையாட்டாக செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here