வெளியாகிறது சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை தடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளன.

மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ரத்து செய்தது.சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவி்ல வெளியாகிறது.

12ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மாதம் 31ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது.தற்போது, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் பிளஸ் 2 சிபிஎஸ்இ முடிவுகள் அறிவிக்கபடவுள்ளது.