Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19.01.2023)

தருமபுரி: சுபகிருது ஆண்டு (Today Rasi Palan) தை மாதம் 5ம் தேதி வியாழக்கிழமை. சந்திர பகவான் தனுசு ராசியில் பயணம் செய்ய உள்ளார். காலை 9.57 மணி வரை துவாதசி. பின்னர் திரியோதசி. கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்லைன் ரம்மி விளையாடினால் பணத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் சறுக்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வேலை உயர்வு கிடைக்காமல் ஏமாற்றம் கிடைக்கலாம்.

ரிஷபம்: வீடு கட்டும் வேலையில் சிக்கல் உண்டாகும். கண்ட இடங்களில் சாப்பிடாதீர்கள். அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேரிடும். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் பெண்கள் விஷயத்தில் அவமானத்தை சந்திப்பீர்கள். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் சுமுகமான நிலையை உண்டாக்க முயற்சி செய்வீர்கள். மனைவியின் மனப்போக்கு அறிந்து நடப்பீர்கள். வரக்கூடிய உபரி வருமானங்களால் கடந்தகால கடன்களை அடைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைத்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

கடகம்: விருப்பம் இல்லாத ஊருக்கு பணிமாறுதல் செய்யப்படுவீர்கள். வெளியில் சொல்ல முடியாத மனக்குறையால் பாதிப்புக்கு உள்ளாவீர்கள். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். புதிய வேலைக்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களை வரவழைத்து வீட்டை கலகலப்பாக மாத்துவீர்கள்.

சிம்மம்: புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கு வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பணி நிமித்தமாக சில நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பீர்கள். கண்ணில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லையால் சஞ்சலப்படுவீர்கள்.

கன்னி: வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை தீர்ப்பீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். தொழில்துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். அந்தஸ்தை காட்ட ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.

துலாம்: விருந்தினர்களிடம் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கடுமையாக வேலை செய்து வருமானம் ஈட்டுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை நீக்குவீர்கள்.

விருச்சிகம்: எடுக்கும் காரியங்களில் எதிர்பாராத வெற்றி காண்பீர்கள். தாயாரின் முழங்கால் வலிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை செய்வீர்கள். சமுதாயச் சேவையால் நற்பெயரும் புகழும் அடைவீர்கள். விரும்பிய பெண்ணின் மனதை கொள்ளை அடிப்பீர்கள்.

தனுசு: வியாபாரத்தில் கூடுதலாக லாபம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வோர்கள் அலைச்சலுக்கு பின் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்து கையிருப்பு கரைவதால் கவலைப்படுவீர்கள். அரசு பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்து சோர்வு அடைவீர்கள்.

மகரம்: வீட்டை புதுப்பிக்கும் வேலையில் கவனத்தை செலுத்துவீர்கள். சகோதரி குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவை தீர்த்து வைப்பீர்கள். நினைக்கின்ற காரியங்களை அலைச்சலுக்கு பின்னரே நிறைவேற்றுவீர்கள். தொழில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள்.

கும்பம்: பங்குச் சந்தை வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நிலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள்.

மீனம்: வியாபாரத்தில் உத்திகளை பயன்படுத்தி வெற்றி அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் நல்ல அனுகூலம் பார்ப்பீர்கள். நண்பர்களிடம் உரிய நேரத்தில் உதவி பெறுவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பால் உற்சாகமடைவீர்கள். மனைவி மக்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள்.